மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு + "||" + Corona damage; CM orders purchase of high cost injections and medicines

கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு

கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு
கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இதனால் தொடர்ந்து 2வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கூடுதலாக சென்றது.

இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை காப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமுடன் எடுத்து வருகிறது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்யும்படி முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதன்படி, ரெம்டெசிவிர் உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.  அவற்றை, மருத்துவ பணிகள் சேவை கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை பாதி மருந்துகள் வந்த நிலையில் மீதி மருந்துகள் ஓரிரு நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளத்தில் தங்கி சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
2. ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. முழு ஊரடங்கையொட்டி கடுமையான நடவடிக்கைகள் தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
முழு ஊரடங்கையொட்டி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்து உள்ளனர்.
4. இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.