தேசிய செய்திகள்

ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; புதுச்சேரியில் முதல் அமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது + "||" + Corona infection; Puducherry employee closures office for 2 days

ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; புதுச்சேரியில் முதல் அமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது

ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; புதுச்சேரியில் முதல் அமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது
புதுச்சேரியில், ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், முதல் அமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.
புதுச்சேரி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பரிசோதனை நேற்று 590 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது.  இதில், புதிதாக புதுச்சேரியில் 27 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் முதல் அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனால், அலுவலகத்தில் அவருடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், இதுபற்றி முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனால், அடுத்த 2 நாட்களுக்கு முதல் அமைச்சர் அலுவலகம் மூடப்படுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழப்பு என தகவல்
சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. இந்தியாவில் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி? மனிதர்களிடையே பரிசோதிக்க மேலும் ஒரு மருந்துக்கு அனுமதி
இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
3. இந்தியாவில் 5 லட்சமாக இருந்தகொரோனா பாதிப்பு 5 நாட்களில் 6 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது
4. கொரோனா பாதிப்பு, இருதரப்பு உறவுகள் பற்றி ரஷிய அதிபர் புதினுடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
கொரோனா பாதிப்பு, இருதரப்பு உறவுகள் பற்றி ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
5. டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.