தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 2,948 பேருக்கு தொற்று உறுதி + "||" + Delhi reports 2948 new #COVID19 cases and 66 deaths today.

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 2,948 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 2,948 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாட்டில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது.  டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதேபோன்று பலி எண்ணிக்கையும் டெல்லியில் உயர்ந்து உள்ளது.  

இந்த நிலையில், டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 66 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், பலி எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,210 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.  28,329 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
2. இந்த வாரம் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டிவிடும் - ராகுல்காந்தி கருத்து
இந்த வாரம் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டிவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் இன்று புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.