தேசிய செய்திகள்

நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர்; சுகாதார அமைச்சகம் தகவல் + "||" + Eight states account for 85.5% of active case load, says health ministry

நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர்; சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர்; சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கூடுதலாக கடந்து சென்று உள்ளது.  இதுவரை 15 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்திலும், டெல்லி அடுத்த இடத்திலும் உள்ளன.  3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் உள்ளனர்.  இதேபோன்று கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கையானது, இந்த 8 மாநிலங்களில் 87 சதவீதம்  அளவுக்கு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனையடுத்து, நாட்டிலுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சூழ்நிலையை மந்திரிகள் குழுவுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் விரிவாக விளக்கியுள்ளது.  தொடர்ந்து, சுகாதார உட்கட்மைப்பினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் சம்பவம் பற்றி அவதூறு தகவல் சென்னையில், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் அதிரடி நடவடிக்கை
சாத்தான்குளம் சம்பவம் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வெளியிட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
2. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் கண்காணிப்பு அதிகாரி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேசன் காசிராஜன் கூறினார்.
3. அரியலூர் மாவட்டத்தில் 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு அதிகாரி தகவல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.
4. கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் எடப்பாடி பழனிசாமி தகவல்
கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு வங்கிகளின் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் கந்தசாமி கூறினார்.