மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தனியார் டி.வி. ஒளிப்பதிவாளர் மரணம்; முதல் அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு + "||" + Private TV cinematographer death for Corona; CM announces Rs.5 lakh relief

கொரோனாவுக்கு தனியார் டி.வி. ஒளிப்பதிவாளர் மரணம்; முதல் அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கொரோனாவுக்கு தனியார் டி.வி. ஒளிப்பதிவாளர் மரணம்; முதல் அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த தனியார் டி.வி. ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் டி.வி. ஒளிப்பதிவாளர் வேல்முருகன் (வயது 41) சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.  அவரது மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் டி.வி. ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.  வேல்முருகனின் குடும்பத்தினருக்கு, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.