மாநில செய்திகள்

தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து + "||" + Special trains in Tamil Nadu canceled till July 15

தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து

தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து
தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. 

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த 7 சிறப்பு ரயில்களை ஜூலை 15வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.