மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு; ஆண்கள் 2,300, பெண்கள் 1,412 + "||" + Coronation affects 2,300 men and 1,412 women in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு; ஆண்கள் 2,300, பெண்கள் 1,412

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு; ஆண்கள் 2,300, பெண்கள் 1,412
தமிழகத்தில் ஆண்கள் 2,300 பேரும், பெண்கள் 1,412 பேரும் கொரோனா பாதிப்புக்கு இன்று ஆளாகியுள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை இல்லாத வகையில், தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது.  இதேபோன்று, இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர்.  இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என 89 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.  இன்று 34,805 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.  இதனால், இன்று வரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு உறுதியான 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலின நபர் ஒருவர் ஆவர்.  இதுவரை ஆண்கள் 48,346 பேர், பெண்கள் 29,968 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தில் 21 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்க சென்ற கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரியவர்
கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரியவர் ஒருவர் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2. விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். நேற்று 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு; டெல்லியில் நாளை மத்திய உள்விவகார நாடாளுமன்ற நிலை குழு ஆலோசனை கூட்டம்
கொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசிக்க டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாளை கூடுகிறது.
5. விருதுநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்ந்து உள்ளது.