தேசிய செய்திகள்

குஜராத் முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு + "||" + Coronation affects former Gujarat chief minister

குஜராத் முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

குஜராத் முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
குஜராத் முன்னாள் முதல் மந்திரி சங்கர்சிங் வகேலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அகமதாபாத்,

குஜராத்தில் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் சங்கர்சிங் வகேலா (வயது 80).  இவர், 4 முறை மக்களவை எம்.பி.யாகவும் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யாக ஒரு முறையும் இருந்துள்ளார்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் ஜவுளி துறை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவருக்கு லேசான அறிகுறிகள் தென்படுகின்றன.  இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.  அவரை மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே தங்க செய்து சிகிச்சையை தொடருவது என்பது பற்றி நாளை முடிவு செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 39 பேர் பலி
மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று 39 பேர் பலியாகி உள்ளனர்.
2. கேரளாவில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
3. தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா; சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது
தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது.
4. கொரோனா பாதித்த சென்னை ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.
5. ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் தப்பிய 106 வயது முதியவர்
டெல்லியில் 106 வயது நிறைந்த முதியவர் ஒருவர் ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் விடுபட்டு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளார்.