தேசிய செய்திகள்

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்வு + "||" + Corona casualties in Mumbai rise to 4,282

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்வு

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்வு
மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 41 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.
மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.  இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மராட்டியம் முதல் இடத்திலும், டெல்லி அடுத்த இடத்திலும் உள்ளன.  3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மராட்டியத்தில் மும்பை பெருநகரம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.  இதுபற்றி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று, 1,460 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 73,747 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 27,134 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 167 ஆக உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.
3. டெல்லியில் கொரோனா பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது.
4. டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்வு; மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.