தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 5,318 பேருக்கு தொற்று உறுதி + "||" + With 5,318 New Covid-19 Cases, Maharashtra Breaks Records of One-day Spike

கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 5,318 பேருக்கு தொற்று உறுதி

கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 5,318 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,59,133 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 167 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 4,430 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ்பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 67,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
2. மராட்டியத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: மேலும் 6,364 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 6,364 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 6,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 6,330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
5. மராட்டியத்தில் அதிகரித்து வரும் உயிரிழப்பு: இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் பலி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.