தேசிய செய்திகள்

கர்நாடகாவில் வரும் 29ந்தேதி முதல் ஊரடங்கு நேரம் மாற்றி அமைப்பு + "||" + The existing timing of night curfew is altered: Karnataka Chief Minister's Office

கர்நாடகாவில் வரும் 29ந்தேதி முதல் ஊரடங்கு நேரம் மாற்றி அமைப்பு

கர்நாடகாவில் வரும் 29ந்தேதி முதல் ஊரடங்கு நேரம் மாற்றி அமைப்பு
கர்நாடகாவில் வரும் 29ந்தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.  இன்று ஒரேநாளில் புதிதாக 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 11,923 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.  இதுபற்றி முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கர்நாடகாவில் இதுவரை ஊரடங்கு நேரம் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை இருந்தது.  வரும் 29ந்தேதி முதல் இரவு ஊரடங்கு 8 மணி முதல் காலை 5 மணிவரை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று வருகிற ஜூலை 10ந்தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து சனி கிழமைகளிலும் மூடப்பட்டு இருக்கும்.  வருகிற ஜூலை 5ந்தேதியில் இருந்து அடுத்த உத்தரவு வரும்வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற துணை நடிகர் கைது
ஊரடங்கை மீறி மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார், மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.