தேசிய செய்திகள்

மே.வங்காளத்தில் மேலும் 521 பேருக்கு கொரோனா தொற்று + "||" + West Bengal records 521 new #COVID19 positive cases and 13 deaths,

மே.வங்காளத்தில் மேலும் 521 பேருக்கு கொரோனா தொற்று

மே.வங்காளத்தில் மேலும் 521 பேருக்கு கொரோனா தொற்று
மேற்கு வங்காளத்தில் மேலும் 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது

இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மராட்டியம் முதல் இடத்திலும், டெல்லி அடுத்த இடத்திலும் உள்ளன.  3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. பிற மாநிலங்களில் தொற்றின் வேகம் குறைவாக இருந்தாலும்  இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், இந்தியாவின் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

மேற்கு வங்காளத்தில் இன்று 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,711 ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல், கொரோனா தொற்றால் இன்று ஒருநாளில் மட்டும் 13 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை அந்த மாநிலத்தில்  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
2. கொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் ?
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வெளியீடு
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 418 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.