தேசிய செய்திகள்

கோவாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது- முதல் மந்திரி ஒப்புதல் + "||" + Goa CM Pramod Sawant: Have to accept community spread has occurred

கோவாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது- முதல் மந்திரி ஒப்புதல்

கோவாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது-  முதல் மந்திரி ஒப்புதல்
கோவாவில் கொரோனா தொற்ற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று அம்மாநில முதல் மந்திரி தெரிவித்துள்ள்ளார்.
பானஜி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை.  அந்த வகையில் கோவாவிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. கோவாவில் 1,039 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கோவாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என அம்மாநில முதல் மந்திரி  பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- ‘கோவாவில் கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டறியப்பட்டு வருகிறது. இங்கு கொரோனா  சமூக பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதையும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக
2. மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ., தாயாருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது.