மாநில செய்திகள்

சென்னை மாவட்ட எல்லையில் இ-பாஸ் சோதனையில் போலீசார் தீவிரம்-உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் + "||" + E-pass checking intensified in neighbouring districts of Chennai

சென்னை மாவட்ட எல்லையில் இ-பாஸ் சோதனையில் போலீசார் தீவிரம்-உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்

சென்னை மாவட்ட எல்லையில் இ-பாஸ் சோதனையில் போலீசார் தீவிரம்-உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதையடுத்து மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்காக சென்னை மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி இ-பாஸ் உள்ளதா? என்று விசாரிக்கிறார்கள். காட்டப்படும் இ-பாஸ் உண்மையானதுதானா என்பதை அதற்குரிய ‘ஸ்கேனிங்’ எந்திரம் கொண்டு போலீசார் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

இ-பாஸ் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் பெற்ற வாகனங்கள் மட்டுமே எல்லையில் இருந்து விடுவிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது?
சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் காய்ச்சல் முகாமில் 8 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களில் 8½ லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 10,463 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4. சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
5. புதிதாக 28 போலீசாருக்கு தொற்று; சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். புதிதாக 28 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது.