மாவட்ட செய்திகள்

தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்;பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் + "||" + Intensified lockdown observed chennai today

தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்;பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்;பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமலாகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சென்னையில் ஏற்கனவே கடந்த 21-ந்தேதி தீவிர முழு ஊரடங்கு அமல் ஆனது. அப்போது பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இப்போது மீண்டும் ஒரு தீவிர முழு ஊரடங்கு நாளை (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. எனவே கடந்த முறை போலவே இந்த தடவையும் பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம். தேவையில்லாமல் சாலைகளில் நடமாட வேண்டாம். மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்களில் வேலை செய்வோர், 

பத்திரிகையாளர்கள் போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. அவர்கள் உரிய அடையாள அட்டையோடு பயணம் செய்யலாம். அதேவேளை அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சாலையில் சுற்றுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை தீவிர ஊரடங்கின்போது கடைபிடிக்கப்பட்ட கட்டுபாடுகளே இந்த தடவையும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் உச்சம்: ஒரே நாளில் 60, 500 பேருக்கு தொற்று
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 60,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் புதிய உச்சம்; கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.