மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த மேலும் 24 பேர் உயிரிழப்பு + "||" + Affected by Corona in Chennai The 24 deaths

சென்னையில் கொரோனா பாதித்த மேலும் 24 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா பாதித்த மேலும் 24 பேர் உயிரிழப்பு
சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.


தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு ஒழிச்சலற்ற பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.

இந்நிலையில்  சென்னையில் கொரோனா பாதித்த மேலும் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  சென்னை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் - தலா 7 பேர், ஸ்டான்லி - 5 பேர்,  கீழ்ப்பாக்கம் - 3 பேர்,  தனியார் மருத்துவமனைகள் - 2 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.