மாநில செய்திகள்

தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான் குளம் காவல் ஆய்வாளராக சேவியர் நியமனம் + "||" + Santhankulam As a police inspector Savior Appointment

தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான் குளம் காவல் ஆய்வாளராக சேவியர் நியமனம்

தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான் குளம் காவல் ஆய்வாளராக சேவியர் நியமனம்
சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 


இதனிடையே, கோவில்பட்டி கிளைச் சிறையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்  உயிரிழந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா கிளைச் சிறையில் விசாரணை மேற்கொண்டார்.  நேற்றிரவு எட்டரை மணிவரை விசாரணை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அதன்பின்னர் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தட்டச்சு இயந்திரங்களுடன் பணியாளர்களும் கிளை சிறைக்குள் விசாரணைக்காக சென்றனர்.

சிறையில் உள்ள கைதிகள்,  சிறை காவலர்கள், சிறை உதவி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறையில் உள்ள ஆவணங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்துள்ள காட்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டு சேகரித்தனர்.

இந்தநிலையில் தூத்துக்குடியில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கெனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.