மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + The Chief Minister is not in the mood to ask for advice Stalin accusation

கொரோனா தடுப்பு நடவடிக்கை: யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

என்னுடைய அறிக்கைகள் அனைத்தும் ஆலோசனை கூறும் வகையில் உள்ளன. ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை நான் கூறவில்லை என சொல்கிறார். யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை. மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் தெரிவித்தேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை. மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன்.

மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்தது யார்? மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும் என குரல் கொடுத்தது யார்? மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தது யார்?

ஊரடங்கில் தளர்வு அறிவித்து, தவறு செய்தது அரசு. மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்கிறார் முதலமைச்சர். அதிக மக்கள் நெருக்கம் உள்ள மும்பை தாராவியில் கூட கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். கொரோனா பரவல் அதிகரிப்பு - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.