மாநில செய்திகள்

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Over 300 people have contracted the coronavirus overnight in Madurai

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரையில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை, 

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தநிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

புதிதாக 300 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,003 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை, 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று
மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. மதுரையில் நேர்முக தேர்வு மூலம் கொரோனா பணிக்காக தற்காலிக மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பு
கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5. மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்,