தேசிய செய்திகள்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் + "||" + PM Modi Mann Ki Baat

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

மன் கீ பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-

ஒரு நாடு எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உலகில் அமைதி நிலவும். உயிரிழந்த ராணுவ வீரர்கள் - ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக துக்கத்தில் இருக்கிறது. தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர்.  சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. 


நாடு சவால்களை சந்தித்து வரும் இந்த கால கட்டங்களில் பல்வேறு புதிய உருவாக்கங்களும் நடைபெற்றுள்ளன.  இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.

மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும்.

கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது. முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஊரடங்கு தளர்வு 2 விஷயங்கள் மிக முக்கியமானவை ஒன்று கொரோனாவை வீழ்த்தவேண்டும் மற்றொன்று பொருளாதார நடவடிக்கை ஆகும்.

பாதுகாப்பு துறையிலும் நாடு சுயசார்பு அடைய வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த மோகன் ராமமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.