மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ + "||" + The father-son death affair has no lock-up death Minister Kadambur Raju

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து  கோவில்பட்டி சிறையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவையும் ஆய்வு செய்தார்.

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் நேற்று முன்தினம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்றும், காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் டெத் என்று பெயர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர் என்று கூறினார். மேலும், 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப் டெத் நடைபெற்றுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக ஐ.நா கருத்து
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
2. சாத்தான்குளம் சம்பவம் : பாடகி சுசித்ரா டுவிட்டரில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்கும்படி சிபிசிஐடி போலீசார் தன்னை அச்சுறுத்தினார்கள் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
4. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
5. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர்.