தேசிய செய்திகள்

சீனாவின் ஜொமேட்டோ டி-சர்ட்டை தீயிட்டு எரித்த ஊழியர் + "||" + Zomato employees burn company T-shirts to protest Chinese investment in firm

சீனாவின் ஜொமேட்டோ டி-சர்ட்டை தீயிட்டு எரித்த ஊழியர்

சீனாவின் ஜொமேட்டோ டி-சர்ட்டை தீயிட்டு எரித்த ஊழியர்
கொல்கத்தாவில் சீன பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜொமேட்டோ ஊழியர் ஒருவர் அந்நிறுவன டி-சர்ட்டை தீயிட்டு எரித்தார்.
கொல்கத்தா,

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை  உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சீன பொருட்களின் பஜாராக இந்தியா இருப்பதாக பலர் விமர்சித்து வந்தனர். இதையடுத்து சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, பிரபல நடிகை
சாஷி அகர்வால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் போட்டு உடைப்பது, எரிப்பது ஆகிய உணர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கொல்கத்தாவின் பெஹலாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் பலரும் சீன பொருட்களை புறகணிப்போம் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜொமேட்டோ நிறுவன ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்தும், ஜொமேட்டோவில் யாரும் உணவு ஆர்டர் செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொண்டனர். இந்த போராட்டத்தின் போது ஊழியர் ஒருவர் திடீரென ஜொமேட்டோ டி-சர்ட்டை தீயிட்டு எரித்தார்.

சீன நிறுவனங்கள் இங்கிருந்து லாபம் ஈட்டுகின்றன, நம் நாட்டின் இராணுவத்தைத் தாக்குகின்றன. அவர்கள் நம்முடைய நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது" என்று போராட்டக்காரர்களில்
ஒருவர் கூறினார்.

மற்றொரு எதிர்ப்பாளர் கூறுகையில், நாங்கள் பட்டினியாகவும் கிடக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் சீனாவிடம் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வேலை செய்ய மாட்டோம் என்றார்.

கொரோனா  காரணமாக மே மாதத்தில், ஜொமாடோ 13 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.