மாநில செய்திகள்

சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் + "||" + Armed Forces police Satish Muthu Suspended

சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்

சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்
சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை,

சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கருத்தை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இதனையடுத்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆணையர் விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தனது முகநூல் முகவரி, பாஸ்வேர்டை கொடுத்து நண்பர்கள் மூலம் கருத்து பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.