தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 813 new COVID-19 cases in Andhra Pradesh, 13,098 total cases

ஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி, 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா, தீவிர பெருந்தொற்றாக மாறி உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக அதிரித்து வருகிறது. 

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. ஆந்திராவிலும் கொரோனா தொற்று தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் ஆந்திராவில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,098 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 12 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 7,021 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் பலத்த மழை: கடந்த 3 நாட்களில் 8 பேர் பலி
ஆந்திராவில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. ஆந்திராவில் இன்று 1,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 1,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் இன்று 1,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 1,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் இன்று 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.