திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று + "||" + In Thiruvannamalai district To a maximum of 143 people today Coronavirus infection
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 143 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1762 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.