தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் + "||" + In Madhya Pradesh, door-to-door survey under ‘Kill Corona’ drive from July 1

மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. 

மத்திய பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 12,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 550 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் மத்தியபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 1ம் தேதி முதல் 'கில் கொரோனா' என்ற பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.  இந்த 'கில் கொரோனா' பிரசாரத்தின் கீழ் வீடு வீடாக கொரோனா சோதனைகளும், கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

மேலும் 15 நாள் பிரசாரத்தில், தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என 2.5 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும்.  மாநிலத்தில் 76.9 சதவீதம் பேர் குணமடைந்து தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எப்போது ரேஷன் பொருட்கள் வாங்கலாம்? நாளை, நாளை மறுநாள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் எந்த நாளில் வாங்க வேண்டும்? என்பதற்கான டோக்கன்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வீடு வீடாக வந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்
மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
3. மத்தியபிரதேசத்தில் 17 காங். எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாயம்: கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி?
மத்தியபிரதேசத்தில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மற்றும் அவருக்கு ஆதரவான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை. அதனால் கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
4. மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்க்க 8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தலா? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு
மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்க்க 8 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் கடத்திச் சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதை பா.ஜனதா மறுத்துள்ளது.
5. மருத்துவக் கல்லூரிகளின் 1000 பேராசிரியர்கள் கூண்டோடு ராஜினாமா; நோயாளிகள் அவதி
மத்தியப்பிரதேச மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து உள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.