மாநில செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Corona confirmed to 1,992 people in a single day in Chennai

சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா உறுதி
சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 1,443 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.  இதனால் இந்த எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது.  35,656 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 31,505 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.  மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 56 ஆயிரத்து 564 ஆக உள்ளது.  சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது.  

இதேபோன்று மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டில் 183 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 169 பேருக்கும், திருவண்ணாமலையில் 142 பேருக்கும், சேலத்தில் 109 பேருக்கும், திருவள்ளூரில் 99 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 92 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்ந்துள்ளது.
2. ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, 130 பேர் பலி
ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.