தேசிய செய்திகள்

டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + 2,889 people affected by coronation in Delhi

டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் மராட்டியத்திற்கு அடுத்து டெல்லி 2வது இடத்தில் உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆக நேற்று உயர்ந்து இருந்தது.  பலி எண்ணிக்கை 2,558 ஆக இருந்தது.  இதேபோன்று இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 301 ஆகவும், 28,329 பேர் தொடர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

டெல்லியில் நேற்று வரை 2,558 பேர் பலியாகி இருந்தனர்.  இந்நிலையில், டெல்லி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 83,077 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 52,607 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் 3,082 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; 230 பேர் புதிதாக சேர்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டத்தில் 288 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
2. சோனியா காந்தி மக்களவை எம்.பி.க்களுடன் கொரோனா பாதிப்பு பற்றி நாளை ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார சூழல் பற்றி நாளை ஆலோசிக்கிறார்.
3. ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; கர்நாடக முதல் மந்திரி தனிமைப்படுத்தி கொண்டார்
ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
4. பொலிவியா நாட்டு அதிபருக்கு கொரோனா பாதிப்பு
பொலிவியா நாட்டு அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72%; மத்திய மந்திரி ஹர்ச வர்தன் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது என மத்திய மந்திரி ஹர்ச வர்தன் அறிவித்துள்ளார்.