மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக 2 புதிய மருந்துகள்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி + "||" + 2 new drugs for corona treatment; Minister Vijayabaskar

கொரோனா சிகிச்சைக்காக 2 புதிய மருந்துகள்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா சிகிச்சைக்காக 2 புதிய மருந்துகள்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 2 புதிய மருந்துகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த 25ந்தேதி 3,509 பேருக்கும், கடந்த 26ந்தேதி 3,645 பேருக்கும், நேற்று 3,713 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இதன்படி, கடந்த 3 நாட்களில் 3,500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியானது.  இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியில், இந்தியாவிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுவதாக குறிப்பிட்டதுடன், தமிழகத்தில் சமூக தொற்று கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,கொரோனா சிகிச்சைக்காக இரண்டு புதிய மருந்துகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், உரிய விதிமுறைகளின்படி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அவற்றை வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகள் கொள்முதல்-அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அதற்கான சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்துள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
2. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது புகார் அளியுங்கள் - பொதுமக்களுக்கு, மாநகராட்சி வேண்டுகோள்
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
3. கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103; இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கான வைரஸ் எதிர்ப்பு மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
4. டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை
டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
5. கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்கீடு
கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்க்கப்பட்டுள்ளன.