தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Curfew extended in Manipur till July 15

மணிப்பூரில் ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மணிப்பூரில் ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
மணிப்பூரில் வருகிற ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
உக்ரூல்,

மணிப்பூரில் 1,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் 432 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங், வருகிற ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  அவர் கூறும்பொழுது, வரும் ஜூலை 1ந்தேதியில் இருந்து 15ந்தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு மணிப்பூரில் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று, அசாமில் கவுகாத்தி நகரில் இன்று இரவு 7 மணிமுதல் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கால் ஓய்வு எடுக்கும் ரெயில்கள் படுக்கைகளாக மாறிய ரெயில்வே தண்டவாளங்கள்
ஊரடங்கு காரணமாக ரெயில்கள் ஓய்வு எடுப்பதால், ரெயில் தண்டவாளங்கள் படுக்கைகளாக மாறிவிட்டன. வீடுகள் இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றன.
2. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
நாளையுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
3. ஊரடங்கு சமயத்தில் மூத்த வீரர்கள் எங்களை ஊக்கப்படுத்தினர்- லால்ரெம்சியாமி
ஊரடங்கு சமயத்தில் மூத்த வீரர்கள் எங்களை ஊக்கப்படுத்தினார்கள் என்று லால்ரெம்சியாமி தெரிவித்துள்ளார்.
4. போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5. தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைப்பு
தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.