தேசிய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி + "||" + When will you talk about the security of the country? Rahul Gandhi questions PM Modi

நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

லடாக்கில் சீன ராணுவ ஊடுருவல் மற்றும் இந்திய வீரர்களின் உயிரிழப்பு தொடர்பாக ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்து விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி பிரதமர் மோடியை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.


அந்தவகையில் நேற்றும் அவர் பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் மூலம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அவர் கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்?’ என கேட்டிருந்தார். பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன்கீ பாத் உரைக்கு முன் இந்த கேள்வியை அவர் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே எல்லை பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவும் பிரதமர் மோடியை குறை கூறியுள்ளார். குறிப்பாக இந்திய-நேபாள எல்லை மோதல் குறித்து அவர் கூறுகையில், ‘தற்போது, முதல் முறையாக நேபாளம் கூட எல்லையில் தனது ராணுவத்தை நிறுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மட்டுமே இது நடக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்
சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
2. கொரோனா தடுப்பு பணி மோடி அரசின் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு-ஆய்வில் தகவல்
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக 74 சதவீதம் பேர் தெரிவித்து இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.
3. இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் - பிரதமர் மோடி
ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும். இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார்.
4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை சடங்குகள் நேற்று காலையில் தொடங்கின. அங்கு கோவிலுக்கான அடிக்கல்லை நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி நாட்டுகிறார்.
5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி
இளைஞர்கள்பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது என பிரதமர் மோடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...