மாநில செய்திகள்

போலீசார் தாக்கியதால் 2 பேர் மரணம் - ஆர்.சரத்குமார் இரங்கல் + "||" + Two people killed as police attacked - R. Sarathkumar condolences

போலீசார் தாக்கியதால் 2 பேர் மரணம் - ஆர்.சரத்குமார் இரங்கல்

போலீசார் தாக்கியதால் 2 பேர் மரணம் - ஆர்.சரத்குமார் இரங்கல்
போலீசார் தாக்கியதால் 2 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு ஆர்.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேசமூர்த்தி என்பவர் போலீசார் துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், தென்காசி மாவட்டம் வி.கே.புதூரை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனை போலீசார் துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலன் இன்றி கடந்த 27-ந் தேதி உயிரிழந்த சம்பவமும் மிகுந்த வேதனை அளிக்கிறது.


கணேசமூர்த்தி மற்றும் குமரேசன் இருவரின் மரணத்திற்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்து இருவரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசார் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை:கொத்தனார் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை செய்த கொத்தனாரின் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.