தேசிய செய்திகள்

ஆந்திராவில் விஷவாயுக்கசிவு: 2 பேர் பலி, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி + "||" + Two Dead, Four Hospitalised After Gas Leak At Visakhapatnam Pharma Unit

ஆந்திராவில் விஷவாயுக்கசிவு: 2 பேர் பலி, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திராவில் விஷவாயுக்கசிவு: 2 பேர் பலி, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர்.
விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடா என்ற இடத்தில்  அமைந்துள்ள  தனியார் மருந்து தொழிற்சாலையில்  நேற்று இரவு  11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். மேலும்  4 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் விசாகப்பட்டினத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயுக்கசிவில்  11 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இதனால், நேற்று இரவு வாயுக்கசிவு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. 

விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வாயுக்கசிவு விபத்து  தொடர்பாக, அதிகாரிகளிடம்  விசாரித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி,  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறும் உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் இறந்தவரின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற அவலம்- முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வேதனை
கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
2. கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டம்
கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் விஷவாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் விஷவாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமாக அளிக்கப்படும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
4. காவேரி - கோதாவரி இணைப்பு: ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளை சந்தித்து பேச திட்டம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
காவேரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளை சந்தித்து திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு: ஆந்திராவில் தொடரும் போராட்டம்
3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் எதிர்க்கட்சிகள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.