தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து- இந்திய நிறுவனத்தின் மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல் + "||" + OVAXIN, India's First COVID-19 Vaccine Candidate, Set For Phase I, II Human Trials

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து- இந்திய நிறுவனத்தின் மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து- இந்திய நிறுவனத்தின் மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

உலக நாடுகளை விழிபிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் ஆரம்பக் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 

ஐதாராபத்தைச் சேர்ந்த  பயோடெக் நிறுவனம்   கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 

கொரோனாவுக்கு எதிராக பயோடெக் என்னும்  இந்திய நிறுவனத்தால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பு மருந்தான COVAXINE  விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்றதால் மனிதர்களிடம் கண்டுபிடிக்க  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.  ஜூலை  மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் எனத்தெரிகிறது.

ஐசிஎம் ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் கோவக்சைன் மருந்தை கண்டறிந்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்திற்கு உலகம் நகரும் என எதிர்பார்க்கலாம். 


தொடர்புடைய செய்திகள்

1. கோவை, நீலகிரியில்7 பேர் கொரோனாவுக்கு பலி
கோவை, நீலகிரியில் 7 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
2. கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
3. கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன? - முதல்-அமைச்சருடன்,மத்திய குழுவினர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
4. கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு
கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனாவுக்கு பாதிரியார் பலி
கொரோனாவுக்கு பாதிரியார் ஒருவர் பலியானார்.