உலக செய்திகள்

நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது + "||" + Leech swims up man’s p..s, drinks pint of blood before docs pull it out

நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது

நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது
நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது டாக்டர்களின் தீவிரமுயற்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
புனோம்

கம்போடியாவின் புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது அவர் உறுப்பு காயமடைந்து ரத்தம் வந்துள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்த முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் 

மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்துள்ளனர்.  தொடர்ந்து அவரது உறுப்பில் வலி இருந்துள்ளது. இதையடுத்து சிறிய கேமிரா வழியாக சிறுநீர்ப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அட்டை பூச்சி 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சியதால் அதனை வெளியேற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின் அவர் குணமடைந்து உள்ளார்.

இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி  வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் இந்திய பயணிகளுக்கு தடை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
3. ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன்
இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4. திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.
5. மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை
ஈராக்கில் மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.