உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் + "||" + Coronavirus: EU to allow in visitors from 14 'safe' countries

கொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

கொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு அற்ற 14 'பாதுகாப்பான' நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு உள்ளது

பிரஸ்சல்ஸ்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருந்தபோதிலும், ஜூலை 1 முதல் "பாதுகாப்பானவை" என்று கருதப்படும் 14 நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்உட்ள்ளது அதில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா ஆகியவை விலக்கப்பட்டுள்ளன.

பட்டியலில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், மொராக்கோ மற்றும் தென் கொரியா ஆகியவை அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு சீன அரசாங்கம் ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை வழங்கினால் சீனாவை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூறி உள்ளனர்.

தொற்று தனிமை முகாமிற்குள் பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் இங்கிலாந்து பயணிகளுக்கான விதிகள் தனித்தனியாக உள்ளன.

டிசம்பர் 31 ம் தேதி பிரெக்சிட் மாற்றம் காலம் முடியும் வரை இங்கிலாந்து குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களைப் போலவே நடத்தப்பட வேண்டும். எனவே, அந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டினரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தற்காலிக பயணக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.

தற்போதைய "பாதுகாப்பான" பட்டியலில், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகியவை சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. பட்டியலை முறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றிய நடைமுறை, மற்றும் நாடுகள் பாதுகாப்பானதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் அளவுகோல்கள் இன்று பிற்பகலுக்குள் இறுதி செய்யப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளில் 17% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் சுமார் 17 சதவீதம் காற்று மாசுபட்டிருந்ததன் காரணமாக உயிரிழந்திருப்பர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
2. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது: அக்டோபர் 28 மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது: அக்டோபர் 28 ந்தேதி மாவட்டம் வாரியாக முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.
4. கொரோனா தொற்று நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
5. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.