மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை + "||" + prima facie evidence against police

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை,

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வந்த தன்னை மிரட்டல் விடுக்கும் வகையில் காவல்துறையினர் பேசியதாக மாஜிஸ்திரேட்டு மதுரை ஐகோர்ட் பதிவாளரிடம் இமெயில் மூலமாக புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை,  புகாருக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன்  இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதன்படி, தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர்  விசாரணைக்கு ஆஜர் ஆகினர். அதேபோல்,
நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் ஆஜரானார்.மிரட்டல் புகாருக்கு உள்ளான சாத்தான்குளம் காவலர் மகாராஜனும் நேரில் ஆஜர் ஆனார்.  

இந்த வழக்கு விசாரணையின் போது, “ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு: எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது
சாத்தான்குளம் தந்தை- மகன் மரண விவகாரத்தில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன்,காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.
2. சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு காலக்கெடு வேண்டும்!
சாத்தான்குளம் சம்பவம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க அரசு முடிவு செய்துள்ளது.
3. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
5. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.