மாநில செய்திகள்

"வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + North Tamil Nadu, Puducherry rain likely Chennai Meteorological Center Information

"வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடக்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய கர்நாடகா கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல சுங்கத்துறை முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலசுங்கத்துறை முதன்மை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
3. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
4. வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை: தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவசியம் என்று கருதப்படும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.