தேசிய செய்திகள்

சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி + "||" + China trying to push two Tibetan nationals into India for alleged anti-India activities

சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி

சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி
சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி: 

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் எல்லை தகராறு தொடர்பாக அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில், சீனா இப்போது திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சிக்கிறது.

இந்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சீனா இரண்டு திபெத்திய நாட்டினரை நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயன்ற விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவர்களில் ஒருவர் திபெத்திய-சீன இராணுவத்தின் ஒருங்கிணைந்த பகுதியான மக்கள் ஆயுத காவல்துறையின் சிறப்பு ஏஜெண்டு ஆவார்.

எல்லையிலும், இந்தியாவின் உள்பகுதியிலும் அமைதியின்மையை பரப்ப சீனத் தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரண்டாவது நபர் திபெத்திய நாட்டவர் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் அதிக செல்வாக்குள்ள சிலருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

அவர்கள் இருவரின் பெயர்  தாஷி மற்றும் டோர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாஷி திபெத்தின் தக்த்சே நகரில் வசிப்பவர். பின்னர் அவர் லாசா நகரில் குடியேறினார், அதன் பின்னர் அவர் மக்கள் ஆயுத காவல்துறையின் இரண்டாம் படைப்பிரிவில் சேர்ந்தார், மேலும் 2017 ஆம் ஆண்டில் சிறப்பு பயிற்சிக்காக செங்டுவுக்கு அனுப்பப்பட்டார்.

தகவல்களின் படி, டோர்ஜியின் தொடர்புகளைப் பயன்படுத்தி, சீன இராணுவத்தின் சிறப்பு உளவாளிகள் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் தனது வலையமைப்பை விரிவுபடுத்த விரும்புகிறார், மேலும் மடங்கள் இருக்கும் இடங்களில் சீன உளவாளிகளின் வலையமைப்பை மேலும் பரப்ப திட்டமிட்டு உள்ளார்.

டோர்ஜி முதலில் திபெத்தில் உள்ள டோர்பி மாவட்டத்தில் வசிப்பவர் மற்றும் 2015 ஆம் ஆண்டு முதல் சீன இராணுவத்தால் திபெத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு திபெத்திய நாட்டினரின் சரியான இலக்கு மற்றும் அவர்களின் இறுதி நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், அவர்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலி
சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலியாகினர்.
2. சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
சீனாவில் கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
4. சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்; கோடிகணக்கில் பணம் பறிப்பு
ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் பிறகு, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. பாகிஸ்தானைப் போல் இரும்பு சகோதரராக ஆப்கானிஸ்தான்,நேபாளம் இருக்க வேண்டும் -சீனா வேண்டுகோள்
நேபாளம், பாகிஸ்தான் , ஆபகானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் சந்திப்பில் இரும்பு சகோதரர்' போல இருக்குமாறு சீனா நேபாளம்,ஆப்கானிஸ்தானைக் கேட்டு கொண்டுள்ளது.