மாநில செய்திகள்

தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத் தரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை + "||" + Govt Assures maximum punishment for those responsible for father-son death - Minister CV Shanmugam

தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத் தரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை

தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத் தரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத்தரும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரது உயிரிழப்புக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ்நாடு அரசின் முன் நிற்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவும் தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.


தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. தந்தை-மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை, உச்சபட்ச தண்டனையாக பெற்று தரும் என்பது நிச்சயம். ஒரு தந்தையை, ஒரு சகோதரனை, ஒரு கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் ஒரு குடும்பத்தின் வலி எத்தகையது? என்பதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். உயிர்களையும், உறவுகளையும் இழந்து வாடுபவர்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை, இந்த அரசு நிச்சயம் உரித்தாக்கும்.

ஆனால் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்தை அரசியலாக்கி, வழக் கம் போலவே முதல்- அமைச்சர் பதவி விலக வேண்டும்,அந்த பதவியில் தான் அமர வேண்டும் என்னும் அதிகார பித்து பிடித்தவராக பின்னால் இருந்து எழுதி தரப்படும் அவதூறுகளை அறிக்கைகளாக அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

அன்று கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை அடித்து கொலை செய்துவிட்டு, பெற்றவர்களை பிடித்து வந்து தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த இவர்களை விட பெற்றோரது உன்னதத்தை உணர்ந்தவர்கள் நாங்கள். பட்டபகலில், மதுரை ஐகோர்ட்டுக்கு எதிரில் பத்திரிகை ஊழியர்கள் 3 பேரை எரித்து படுகொலை செய்துவிட்டு இன்று இவர்கள் ஜீவகாருண்யம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

தி.மு.க.வுக்காக உழைத்த தா.கிருட்டிணனை, தார் சாலையில் வெட்டி போட்டு நடைபயிற்சியை கொலை பயிற்சியாக்கிய கொடியவர்களின் கூடாரம், குற்றவாளிகளின் நாற்றங்கலை இந்த நாடறியும்.

இவ்வளவு ஏன்... ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பெரம்பலூர் சாதிக்பாட்ஷா மர்மமாக இறந்ததற்கு கொலைப்பழி சுமத்திய வைகோவை மறுமாதமே மு.க.ஸ்டாலின் தன்னோடு கூட்டணியில் சேர்த்துக்கொண்டது ஏன்? எதனை மூடி மறைக்க? 15 வருட நிழல் நண்பராக இருந்த அண்ணாநகர் ரமேஷ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டபோது அருகில் இருந்த அண்ணாநகருக்கு செல்லாதவர், இப்போது மட்டும் தன் மகனை இ-பாஸ் வாங்காமல் தொற்றுநோய் காலத்தில் தூத்துக்குடி வரை அனுப்பிவைத்தது எதற்காக? என்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே, அவதூறுகளால் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று கனா காண்பதை விட்டுவிட்டு நெறி சார்ந்த அரசியலை மு.க.ஸ்டாலின் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும். தர்மத்திற்கு மாறான, தரம்கெட்ட போக்கை இனியும் அவர் தொடருவாரானால், தி.மு.க. முகமற்று அழியும் என்பது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவரை அடித்துக்கொன்ற தந்தை கைது
அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
2. தந்தை-மகன் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது: கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை - மருத்துவ அதிகாரியிடமும் விவரம் சேகரிப்பு
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவ அதிகாரியிடமும் விசாரித்து விவரம் சேகரித்தனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.
3. கர்நாடகத்தில் புதிதாக 9,058 பேருக்கு கொரோனா பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 135 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 9,058 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல்
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, போலீஸ்காரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
5. கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; தந்தை தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம் பிடித்ததால், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார்.