உலக செய்திகள்

2036 வரை அதிபராக பதவி வகிக்கும் புதினின் சட்ட திருத்தம்- ரஷ்ய மக்கள் ஆதரவு + "||" + Russian Voters Back Reforms Allowing Vladimir Putin To Rule Until 2036

2036 வரை அதிபராக பதவி வகிக்கும் புதினின் சட்ட திருத்தம்- ரஷ்ய மக்கள் ஆதரவு

2036 வரை அதிபராக பதவி வகிக்கும் புதினின் சட்ட திருத்தம்- ரஷ்ய மக்கள் ஆதரவு
ரஷ்ய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மாஸ்கோ,

ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார்.

வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. தற்போது, அவரது பதவிக்காலத்தை மேலும் இரு முறை, அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களின் வாக்காளர்களின் ஒப்புதலும் மிக முக்கியமானது என்று கூறிய புதின், வாக்கெடுப்பை நடத்தினர்.  வாக்கெடுப்பு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. 7 நாட்கள் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்ய அதிபர் புதினும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை  எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், புதினுக்கு 76.9 சதவிகித வாக்குகள் ஆதரவாக கிடைட்த்துள்ளன. இதன் மூலம் அவரது  பதவிக்காலம் நீட்டிப்பு குறித்த அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளது.  

ரஷ்ய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு முடிவுகள் பொய்யானது என்று விமர்சித்துள்ளன. மக்களின் எண்ணங்களை இந்த முடிவுகள் பிரதிபலிக்கவில்லை எனவும் சாடியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,12,823 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9,12,823 ஆக உயர்ந்துள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,97,599 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,97,599 ஆக உயர்ந்துள்ளது
4. ரஷியாவில் ஆற்றில் மூழ்கி இறந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை-எடப்பாடி பழனிசாமி தகவல்
ரஷியாவில் ஆற்றில் மூழ்கி இறந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.