உலக செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் - இங்கிலாந்து + "||" + US included on England's Covid-19 'red list' for travellers

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் - இங்கிலாந்து

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் - இங்கிலாந்து
கொரோனா பாதிப்பு சிவப்பு பட்டியலில் அமெரிக்கா அங்கிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் என இங்கிலாந்து கூறி உள்ளது.
லண்டன்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் அமுலில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய உள்ளூர்களில் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லீஸ்டர் போன்ற பகுதிகளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் சுகாதாரத் திணைக்களம் கடந்த 24 மணி நேரத்தில், 89 பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,995-ஆக உயர்ந்து உள்ளது.

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் வெளியில் என மொத்தம் 43,995 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் துவக்கத்தில் இருந்து இங்கிலாந்தில் மொத்தம் 313,483 பேர் கோரோனாவால் பாதிக்கபட்டு உள்ளதாக சுகாதாரத் துறை  அறிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 576 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்லாகி உள்ளனர். ஜூலை 2 ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி, கொரோனாவுக்கு நாடு முழுவதும் 9,914,663 பேர் சோதனைகள் நடைற்று உள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 252,084 சோதனைகள் நடந்து உள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து கொரோனா வைரஸ் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளில் அமெரிக்கா இருக்கும் என்பதை போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அங்கிருந்து வரும் பயணிகள் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஆரம்ப கட்டத்திலிருந்தே இங்கிலாந்தில் இருந்து  வந்த  விமானங்களைத் தடைசெய்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரஸ்பர ஏற்பாடு இல்லை.

அமெரிக்காவில் தற்போது மிக அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் இருப்பதால், விமானங்களுக்கு தடை விதித்தது கொரோனா நெருக்கடியைத் தவிர்க்க அவர்களுக்கு உதவவில்லை என்று அவர் கூறினார்.

விலக்கு அளிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரிப்பதில் இங்கிலாது  அரசாங்கம் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்துடன் முறையாக ஆலோசிக்கவில்லை என்ற விமர்சனம் குறித்தும் ஷாப்ஸ் பதிலளித்தார்.

38 நிமிட அறிவிப்புடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஸ்காட்டிஷ் தேசிய கட்சி குற்றம் சாட்டியது.நான்கு நாடுகளின் தலைமை மருத்துவ அதிகாரிகள் இந்த பட்டியலை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அது நடைமுறைக்கு வரும் போது, ஜூலை 10 ஆம் தேதிக்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்கள் கையெழுத்திடும் என்றும் ஷாப்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து
முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு! அதனால் வரப்போகும் ஆபத்து.
2. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
3. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
4. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
5. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.