மாநில செய்திகள்

ரெயில்களை தனியார் இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தி.மு.க. சார்பில் பிரதமருக்கு கடிதம் + "||" + Review the Plan to run railways privately - DMK Letter to the Prime Minister

ரெயில்களை தனியார் இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தி.மு.க. சார்பில் பிரதமருக்கு கடிதம்

ரெயில்களை தனியார் இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தி.மு.க. சார்பில் பிரதமருக்கு கடிதம்
ரெயில்களை தனியார் இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை,

ரெயில்வே துறையில் தனியார் மூலம் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இந்தியாவில் 109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரெயில்களை தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை அறிவித்து இருப்பது மத்திய அரசின் முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிரானது ஆகும். தனியார் மூலம் ரெயில்களை இயக்குவது என்பது ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிரானது ஆகும்.


தனியார் மூலம் ரெயில்களை இயக்கும்போது லாப நோக்கம் மட்டுமே முக்கியமானதாக இருக்கும். இது, சாதாரண மக்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரெயில்வே துறையில் 4½ லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது வேலைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். ரெயில்வே துறையை பொறுத்தமட்டில் தேசிய அளவில் அனைத்து நகரங்களையும் இணைத்து லாப நோக்கம் அல்லாமல் செயல்பட்டு வருகிறது.

தனியார் ரெயில்கள் மூலம் ரெயில்கள் இயக்கப்படும்போது இது சாத்தியம் இல்லாமல் போய்விடும். தனியார் ரெயில்களை இயக்கும் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி லாப நோக்கில் செயல்படும்போது ரெயில்வே துறையும் கட்டணத்தை உயர்த்தி அதை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும். அதுபோன்ற சூழ்நிலையில் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ரெயில்வே துறையின் நோக்கமும் பாழ்பட்டு விடும். எனவே, தனியார் மூலம் ரெயில்களை இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பரங்கிமலை-சென்டிரல் இடையேயான 2-வது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை
பரங்கிமலை - சென்டிரல் இடையேயான 2-வது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
2. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 200 பயணிகள் நெல்லை வந்தனர் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளி மகிழ்ச்சி
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 200 பயணிகள் நேற்று நெல்லை வந்தனர். இந்த ரெயிலில் சொந்த ஊர் திரும்பியதால் தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார்.
3. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது பயணிகளிடம் ஆர்வம் இல்லை
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. ஆனால் பயணம் செய்ய பயணிகள் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.
4. அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் புறக்கணிக்கப்படும் நிலை
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில்பாதை திட்டப்பணி போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
5. மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் முனையம் ரூ.1,642 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் முனையம் ரூ.1,642 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது.