மாநில செய்திகள்

கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பலி + "||" + Maduranthakam Government Hospital Head Doctor dies due to Corona

கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பலி

கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பலி
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 52). இவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது.


இதையடுத்து அவர் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக 30-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவபணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த டாக் டர் ஒருவரும், மின்ட் சாலை பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 168 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு
புதுவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார்.
2. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரைக்கால் மீன்பிடி துறைமுகம் மூடல்
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா மணிப்பால் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனாவில் இருந்து சித்தராமையா குணமடைய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
4. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை நெருங்கியது 110 பேர் மரணம்
கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு 110 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனா அச்சுறுத்தல்: தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்ட திரிபுரா முதல் மந்திரி
குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திரிபுரா முதல் மந்திரி தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.