மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு + "||" + Govt allocates Rs 40 crore for food and lodging facilities for doctors and medical staff

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளுக்கான செலவுக்காக ரூ.40 கோடி தொகையை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அறிவிக்கப்பட்டுள்ள நோயாகும். எனவே இதற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஜூன் 26-ந் தேதி அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு (1,070 படுக்கைகள்) உணவுக்கான செலவுத் தொகையாக ரூ.2 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்தை அளிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் கோரியிருப்பதாக தெரிவித்துள்ளார்.


அதுபோல கொரோனா நோயாளிகளுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளை செய்து தரும் செலவுக்காக ரூ.40 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் (ஜூன் 4 முதல் ஜூலை 4-ந் தேதிவரை) அனுமதிக்கும்படி கோரியுள்ளார்.

சென்னையில் உணவுச் செலவுக்காக ரூ.350 மட்டும் அனுமதிக்கலாம் என்று அதற்கான குழு நிர்ணயித்துள்ளது. அதன்படி ரூ.1 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரம் தொகை அனுமதிக்கப்படுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளுக்காக ஆகும் ரூ.40 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜூன் 1-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரையில் பணியாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களுக்கான கேமரா உள்ளிட்ட செலவுத் தொகையாக ரூ.3.81 கோடி கோரப்பட்டுள்ளது. அரசிடம் வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. அவை ஏற்கப்பட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.45.77 கோடி அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா வைரசால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார்.
4. தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது நெல்லை, தென்காசியில் 335 பேருக்கு தொற்று
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. நெல்லை, தென்காசியில் 335 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் 9 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா?
கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.