தேசிய செய்திகள்

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது + "||" + Mangalyaan Captures Image Of Phobos, Biggest Moon Of Mars

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.
பெங்களூரு:

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.

சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த விண்கலம், 6 மாத கால ஆயுளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 6 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.

செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவு போபோஸின் படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் படம் பிடித்து உள்ளது

ஜூலை 1 ம் தேதி மார்ஸ் ஆர்பிடர் மிஷன் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது இந்த  படம் எடுக்கப்பட்டது.

போபோஸ் பெரும்பாலும் கார்பனேசிய காண்டிரைட்டுகளால் ஆனது என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ கூறும் போது ஸ்டோக்னி, போபோஸின் மிகப்பெரிய பள்ளம் மற்றும் பிற பள்ளங்களுடன் (ஷ்க்லோவ்ஸ்கி, ரோச் & கிரில்ட்ரிக்) இந்த படத்தில் காணப்படுவதாக  கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்
9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து இஸ்ரோ வருகிற நவம்பர் மாதம், 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
2. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை: ஐக்கிய அரபு அமீரக திட்டத்தை வழி நடத்திய பெண்
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரக திட்டத்தை ஒரு பெண் தலைமை தாங்கி வழிநடத்தி உள்ளார்.
3. செவ்வாய்கிரகத்தின் 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் சிலிர்ப்பூட்டும் வீடியோ
செவ்வாய்கிரகத்தில் உள்ள 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் குறித்த சிலிர்ப்பூட்டும் வீடியோவை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டு உள்ளது.
4. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ தலைவர் சிவன்
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...