மாநில செய்திகள்

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Full curfew extension in Madurai till 12th - Edappadi Palanisamy announcement

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுரை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன.  இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த சுழலில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாட்கள் (வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை) நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதன்படி மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் முழுமுடக்கம் நீட்டிக்கப்பட உள்ளது. 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழு ஊரடங்கு காலத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் நாளையுடன் முழு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் தமிழக அரசு இந்த நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் ஒரே நாளில் 184 பேர் குணம் அடைந்தனர்: புதிதாக 109 பேருக்கு நோய் தொற்று
மதுரையில் ஒரே நாளில் 184 பேர் குணம் அடைந்தனர். புதிதாக 109 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
2. மதுரையில் ரூ.304 கோடியில் திட்டங்கள்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
மதுரையில் ரூ.304 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
3. மதுரைக்கு ரூ.1,200 கோடியில் முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மதுரை பெரிய ஆஸ்பத்திரி ரூ.305 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும், மதுரை நகருக்கான முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,200 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. மதுரையில் பயங்கரம்: தாய் கண் எதிரே 2 மகன்கள் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரையில் முன் விரோதம் காரணமாக தாய் கண் எதிரே 2 மகன்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. மதுரை, தேனி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மதுரை, தேனி, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.