தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை தகவல் + "||" + 2,505 fresh COVID cases in Delhi take tally to over 97,000; death toll crosses 3,000-mark

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை தகவல்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 97,200 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 55 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,004 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 2,632 பேர் அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 256 ஆக உள்ளது. மேலும் 25,940 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சுதந்திர தின விழா: டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
5. டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...