உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 5 July 2020 6:38 AM IST (Updated: 5 July 2020 6:38 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. உலக முழுவதும் உக்கிர தாண்டவ ஆடி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,13,72,004  ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 532,861 ஆக  கூடியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,433,942- ஆக உள்ளது.

Next Story