மாநில செய்திகள்

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு + "||" + 26 people died for corona in Chennai since last night

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், நேற்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 66,538 ஆக உள்ளது.


சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னையில் இதுவரை 41,309 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குண்மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 24,195 சிகிச்சை பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,033 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிப்பு
இந்திய ஆக்கி அணியின் வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2. ஜி.எஸ்.டி. வரி ரசீது போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி-வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரிக்கான ரசீதுகளை போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி செய்தது தொடர்பாக வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது.
4. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
5. ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.